குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை! Kurumba Gounder varalaru

 

பழங்குடியினர்  குறும்பர் வரலாறு 



குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!
நம்  மன்னர்களின் வீரதீரத்தை வருங்கால சந்ததியினருக்குச் சொல்வதற்காக காத்துக்  கொண்டிருக்கிறது செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban)…………..
சென்னையிலிருந்து திருவண்ணாமலை செல்லும்  பேருந்துகளின் ஜன்னல் வழியே பார்த்து கண்கள் பிரமிப்பில் தன் இமைகளை மூடிக்கொள்ள மறந்துவிட்டது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமான செஞ்சி, சென்னையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது.செஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் நடந்து செல்லும்போதே, செஞ்சிக் கோட்டையின்(Senjikottai Kotilingam Kurumban) கம்பீரத் தோற்றம் நம்மை வேகமாக நடைபோட வைக்கிறது. செஞ்சிக் கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரைதான் பொதுமக்களை அனுமதிக்கிறார்கள்.நுழைவு வாயிலுக்கு மிக அருகிலேயே இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின் அலுவலகம் இருக்கிறது. அதைக் கடந்து சென்றால் சிதிலமடைந்த நிலையில் உள்ள ஓர் அம்மன் கோயிலும், சிவன் கோயிலும் நம்மை வரவேற்கின்றன. இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் அனைத்தும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் சேதப்படுத்தப் பட்டிருக்கின்றன. இருந்தாலும் அதன் அழகு, இந்தச் சிற்பங்கள் சேதப்படுத்தப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நம்மை ஏங்க வைக்கிறது.
தொடர்ந்து நாம் பிரமிப்புடன் நடந்து செல்லும்போது வேலூர் வாயிலும், சாதத்துல்லாகான் மசூதியும் வருகிறது. (இந்த சாதத்துல்லாகான் மசூதி தொல்பொருள் ஆய்வுத்துறையால் வர்ணம் பூசப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.)
           செஞ்சிக் கோட்டையானது(Senjikottai Kotilingam Kurumban) ராஜகிரி கோட்டை, கிருஷ்ணகிரி கோட்டை, சந்திரகிரி கோட்டை, மேற்குமலைக் கோட்டை என்று பல பிரிவுகளாக உள்ளது. நுழைவுக்கட்டணம் செலுத்தி ராஜகிரிகோட்டைக்குள் நுழையும்முன், அதன் வரலாற்றை தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்.
இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது அனுமன் பர்வத மலையை இலங்கைக்கு தன் கையால் தூக்கிச் சென்றபோது அதிலிருந்து பிரிந்து விழுந்த சிறிய பகுதிதான் சிரஞ்சீவி மலை என்றும், அதுதான் காலப்போக்கில் செஞ்சி என்று மாறியதாகவும் சிலர் சொல்கிறார்கள். இன்னும் சிலர் ராஜகிரி கோட்டைக்குள் உள்ள செஞ்சியம்மன் கோயிலின் பெயரிலேயே செஞ்சி என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள். சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி , சிங்கபுரி கோட்டம் என்பார்கள் அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது.இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கபுரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்து இருக்கலாம் என்பதற்கு சான்று.
.. தமிழக வரலாற்றில் செஞ்சிக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு , மேற்கு தமிழகத்தில் வலிமையான கோட்டை கொத்தளம் உடைய அரசியல் களம் என்றால் அது செஞ்சி தான்
.சென்னை,வேலூர்  கோட்டைகள் எல்லாம் கட்டுவதற்கு முன்னரே கோட்டையுடன் வலிமையாக திகழ்ந்த ஊர் செஞ்சி.

குறும்பர் பரம்பரையினர் வரலாறு
          
ஆடு மேய்க்கும் குறும்பன்(Kurumban) ஒருவர் அந்த வழியே சென்ற முனிவருக்கு பசிக்கு உணவளித்ததால் இங்கே புதையல் உள்ளது என செஞ்சிமலைப்பகுதியை காட்டி சென்றார் அதனை எடுத்த ஆடு மேய்ப்பவர் அந்த பணத்தைக் கொண்டு கட்டிய கோட்டை தான் செஞ்சிக்கோட்டை என்பார்கள்.
கோபலிங்க குறும்பன் (அ) கோட்டியலிங்க குறும்பன் 1320-1330 ஆண்டனர்.(Senjikottai Kotilingam Kurumban)

முப்படையை அமைத்து செஞ்சிக் கோட்டை ஆட்சி செய்தார். செஞ்சிக் கோட்டை மூன்று குன்றுகளையும் அவற்றை இணைக்கும் சுவர்களையும் உள்ளடக்கியது. இவற்றுள் 7 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளடங்கியுள்ளது. 240 மீட்டர் (800 அடி) உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த இக் கோட்டை 24 மீட்டர் (80 அடி) அகலமுள்ளசுவர்களையும் அகழியினால் காப்புச் செய்யப்பட்டது. , வெடிமருந்து கிடங்கு, தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், குளம், விரிவுப்படுத்தி, இவர்கள் காலத்தில்தான் மிக நீண்ட வலிமைமிக்க சுவர்களுடன் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு கட்டப்பட்டன. வலிமைமிக்க சுவர்களுடன் கூடிய 3 கோட்டை கட்டப்பட்டன.கட்டுமானம் கருங்கல் (பாறை) பாறைகள்]], சுண்ணக் கலவைபயன்பட்டது, பல மன்னர்கள் இக்கோட்டையை கைப்பற்ற எவ்வளவோ முயன்றபோதும் அவர்களால் இக் குறும்பர்(Kurumbar) பரம்பரையை வெல்ல முடியவில்லை. குறும்பர்(Kurumbar) பரம்பரையினர் அழிந்த பிறகு  மேலும் சில மன்னர்கள் ஆட்சி செய்தனர் செஞ்சிக் c (Gingee Fort, Senji Fort) (இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தப்பியிருக்கும் மிகச் சில கோட்டைகளுள்  சிறந்த கோட்டைகளுள் இதுவும் ஒன்று.
விஜயநகர மன்னர்கள்
கி.பி14-ம் நூற்றாண்டிலிருந்து 150 ஆண்டுகள் வரை ஆட்சி செய்த விஜயநகர மன்னர்கள் ,செஞ்சிக் கோட்டையை(Senjikottai Kotilingam Kurumban) விரிவுபடுத்தி இருக்கிறார்கள். இவர்கள் காலத்தில்தான் மிக நீண்ட வலிமைமிக்க சுவர்களுடன் கூடிய கோட்டைகளும், நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட உயர்ந்த கோபுரங்களுடன் கூடிய கோயில்களும் கட்டப்பட்டன.
1921 ஆம் ஆண்டில் இது ஒரு தேசிய நினைவுச் சின்னம் என அறிவிக்கப்பட்டு தொல்லியற் துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. அண்மைக் காலங்களில் இந்தியச் சுற்றுலாத்துறை பொதுவாக மறக்கப்பட்டுவிட்ட இக் கோட்டையைப் பிரபலப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றது.
இத்தனை வரலாற்று தகவல்கள் இருந்தும் கோட்டை கட்டி ஆட்சி செய்த கோட்டைலிங்ககுறும்பன்(Senjikottai Kotilingam Kurumban) பெயர் செஞ்சிக்கோட்டை(Senjikottai Kotilingam Kurumban) கல்வெட்டில் பதிவு இல்லை! என்பது நம்இனத்திற்கான  வெட்கக்கேடு!
நாம் ஆண்ட பரம்பரை என்பதை அழிக்கும் முயற்சி,ந நாம் அரசியல் ம இதற  அதிகாரத்தை பெறாமல் இருப்பதற்கு நம்மிடம் நம் இனம் சார்ந்த வரலாற்று விழிப்புணர்வு இல்லாமல்.நாம்  அடுத்தவனை அதிகாரத்தில் உட்கார வைத்து விட்டு அவனிடம் கையேந்தி நிற்கிறோம்  இந்த இழிவு நிலை மாற வேண்டும்



குறும்பர் சரித்திரம் பேசும் செஞ்சிக் கோட்டை!




Kurumba Gounder varalaru

Post a Comment

Previous Post Next Post

Pallavar vamsam kurumba gounder varalaru

Contact Form