sangolli rayanna

  



#சங்கொல்லி இராயண்ணா

சங்கொல்லி இராயண்ணா (Sangolli Rayanna) பிறப்பு (15/08/1796 ) இறப்பு  (26/01/1831)  கர்நாடகாவின் கிட்டூர் சுதேச மாநிலத்தில் ஒரு இந்திய இராணுவத்தைச் சேர்ந்த போர்வீரர். அந்த காலத்தில் ராணி சென்னம்மா ஆட்சி செய்த கிட்டூர் இராச்சியத்தின் படை வீரராக இருந்த இவர் இறக்கும் வரை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் போராடினார். இவரது வாழ்க்கை 2012இல் சங்கொல்லி இராயண்ணா என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளியானது.

இராயண்ணா  1824 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். [1] இவர் தொடர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடினார். மன்னர் மல்லசர்ஜா மற்றும் இராணி சென்னம்மா ஆகியோரின் வளர்ப்பு மகனான சிவலிங்கப்பாவை கிட்டூரின் ஆட்சியாளராக நிறுவ விரும்பினார் . [2 இராயண்ணா உள்ளூர் மக்களை அணிதிரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக கரந்தடிப் போரைத் தொடங்கினார். இவரும் இவரது இராணுவமும் பல இடங்களில் அரசாங்க அலுவலகங்களை எரித்தனர். பிரித்தானிய துருப்புக்களை அழித்தனர். மேலும், கருவூலங்களை சூறையாடினர். இராயண்ணா நில உரிமையாளர்களுக்கு வரி விதித்து மக்களிடமிருந்து ஒரு இராணுவத்தை கட்டியெழுப்பினார். ஆங்கிலேயர்களால் இவரை வெளிப்படையான போரில் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, துரோகத்தால், இராயண்ணா ஏப்ரல் 1830 இல் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். புதிய ஆட்சியாளராக வேண்டிய சிறுவன் சிவலிங்கப்பாவும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டான். 1829–30ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில், சித்தி வீரரான கஜவீரன் இவருக்கு உதவினான். [3] 

26 ஜனவரி 1831 அன்று பெல்காம் மாவட்டத்தில் நந்தகாட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலமரத்தில் தூக்கிலிடப்பட்டார்.


sangolli rayanna

sangolli rayanna

sangolli rayanna

sangolli rayanna

sangolli rayanna

sangolli rayanna

sangolli rayanna


Songolli ramanna video hd









Post a Comment

Previous Post Next Post

Pallavar vamsam kurumba gounder varalaru

Contact Form