காடுவெட்டி பீரய்யா - குறும்பர் நடுகல் :
~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~.~
#குறும்பர்
#காடுவெட்டி_பீரப்பா
#தேவனஹள்ளி_நடுகல்
#நுளம்ப_பல்லவர் காலத்தில் அரசியல் சூழ்நிலைகள், அன்றைய போர்கள்,
ராஷ்டிரகூடர்கள், கங்கர், பாணர் இடையேயான உறவுகள், சோழர்களுடனான கடுமையான போர்கள் ஆகியவற்றை காரணமாக நுளம்ப அரசின் கிராமங்களைத் தாக்கும் எதிரிப் படைகள் கிராமங்களை அழிப்பது மட்டுமன்றி கிராமங்களை எரித்து நாசம் செய்து கொண்டிருந்தனர், மேலும், கிராமங்களில் ஆநிரைகளை கூட கவர்ந்து செல்வதும் வழக்கம். இவைகளில் இருந்து கிராமங்களைப் பாதுகாப்பதற்காக மக்கள் எதிரிகளை எதிர்த்துப் போரிட்டனர். இப்படிப் போராடி மடிந்தவர்களைச் அச்சமூகத்தில் மாவீரர்களாகவும், தியாகம் செய்தவர்களாகவும் பார்க்கப்பட்டார்கள்.
அவ்வகையில் நுளம்ப திலீபனின் காலத்து போர் தொடர்பான வீர நடுகல் ஒன்றினை பார்ப்போம்.
கர்நாடக மாநிலம், #தேவனஹள்ளி தாலுக்காவில் உள்ள #சட்டெனஹள்ளி (கொய்ரா) பாறைக்கு அருகில் கி.பி.949ம் (சாலி.871+78) ஆண்டு நடுகல் ஒன்றில் நொளம்ப மன்னன் அய்யப்பதேவனின் மகன் திலீபனின் ஆட்சிக்காலத்தில் கண்ணந்தவனை முற்றுகையிட்ட பகைவர்களுடன் பல எதிரிகளைக் கொன்றான் இவன் பெயர் #காடுவெட்டி_பீரய்யா என பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவீரர்களின் சிற்பமும் பிரமிக்க வைக்கிறது. வீரன் எதிரியின் உடலை துண்டாடுவதையும், வீரன் எதிரியின் உடற்பகுதியை வெட்டுவதையும் இந்த நடுகற்சிற்பம் காட்டுகிறது.
_____
குறிப்பு :
~.~.~.~.~
"#பீரய்யா" என்பது குறும்பர்களுக்கே உரிய குறும்பர்களின் பிரதான குலதெய்வமும், ஆநிரைகளுக்குரிய தெய்வமும் ஆகும், மேலும் நடுகல் உள்ள பகுதி குறும்பரின மக்கள் பின்புலம் கொண்டது. எனவே இந்த நடுகல் வீரர் குறும்பர் குலத்தவர் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இதேபோன்று இதே காலக்கட்டத்தை சேர்ந்த ஹூப்லி தாலுகா பன்னூர் வீரகல் ஒன்று தனது கிராம ஆநிரைகளை கவர்ந்தும், பெண்களை இழிவு செய்துமிருந்த பகைவர் படையினரை வெட்டிகொன்று தானும் மரணமடைந்த ஒரு குறும்பர் குல வீரனின் நடுகல் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது, அந்த நடுகல் சாசனம் அவ்வீரனை "#குறும்பர_பீரய்யா" என்று பதிவு செய்கின்றது.
எனவே, மேற்சொன்ன தேவனஹள்ளி நடுகல் சாசனம் குறும்பர்களுடையது என்பது உறுதி.
#Kurumbar #Kaduvetti #Kaduvetti_Beerayya #Devanahalli_Heroicstone #Karnataka #Nolamba_Pallava
-